R News: வன்னி
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

தாய் பாசத்தைவிட வலிமையானது கள்ளக்காதல்..வவுனியாவில் பெற்ற குழந்தையை கிடங்கு வெட்டிப் புதைத்த தாய்

Written By Unknown on Saturday, July 13, 2013 | 6:15 PM

வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்குவெட்டிப் புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ,ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில்வாழ்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தையொன்றைப் பிரசவித்து அதனை உடனேயே கிடங்கு வெட்டிப்புதைத்துள்ளார். இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவித்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாய்க்கு 7வயது மகன்உள்ள நிலையில் தற்போது இத்தாய் தலை மறைவாகியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுள்ளனர் எனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஹர்த்தால்

Written By Unknown on Wednesday, July 10, 2013 | 4:40 PM

முல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடும் மீன்படி நடவடிக்கையை நிறுத்தக் கோரி மூன்று மீனவர்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றனது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, மீன்பிடி அமைச்சர் அல்லது அவரின் பிரதிநிதி அல்லது மாவட்ட செயலாளர் ஆகியோரில் ஒருவரினால் இது தொடர்பில் உறுதிமொழி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேனப்பிலவு சம்பவம் : இராணுவச் சிப்பாய் கைது

Written By Unknown on Thursday, May 23, 2013 | 10:39 AM

வவுனியா நெடுங்கேணி, சேனைப்பிலவு பாடசாலை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய இந்த ஏழு வயதுச் சிறுமி கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்டு, காட்டுப்பாங்கான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று விசாரணகளின் மூலம் தெரியவந்திருக்கின்றது. தலை, காது, கண் ஆகியவற்றில் காயமடைந்த இவர் தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று நெடுங்கேணி, வவுனியா ஆகிய நகரங்களில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. 

பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி, இந்த ஆர்பபாட்டங்களின்போது, ஜனாதிபதிக்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே நெடுங்கேணி பகுதியில் பணியாற்றுகின்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இவரை விசாரணைக்கு உட்படுத்திய புலனாய்வு பொலிசார் வவுனியா நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தி மூன்று தினங்கள் இவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருப்பதாக பொலிசார் கூறினர். இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் இடம்பெற்ற இதேபோன்றதொரு குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்காகத் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

27 வருடங்களின் பின் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை

Written By Unknown on Tuesday, May 14, 2013 | 2:03 PM

27 வருடங்களின் பின் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில்பாதை 81.34 மில்லியன் டொலரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதையை மீள நிர்மாணிப்பதற்காக இந்திய நிறுவனமொன்று நிதியை வழங்கியுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமான இப்புகையிரத பயணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ரிஷாத்துக்கு எதிர்ப்பு! முள்ளியவளையில் பைக்கோ இயந்திரங்களுக்கு குறுக்காக படுத்து மக்கள் போராட்டம்

Written By Unknown on Sunday, April 7, 2013 | 2:08 PM


மக்களுக்கான காணிப்பங்கீடு தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் போராட்டம் வெடித்தது. மக்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார்.
காணியில்லாமல் 30 வருடங்களாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றார் என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர்.
முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்தப் பகுதியில் தனக்கு ஆதரவான ஆயிரத்து 445 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக குறித்த பிரதேசத்தை நிலஅளவை செய்வதற்காக கடந்த மாதம் 21ம் திகதி நில அளவையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களை நிலஅளவை செய்யவிடாமல் முல்லைத்தீவு மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பி அனுப்பினர்.
இவ்வாறானதொரு நிலையில் முல்லைத்தீவுக்கு நேற்று சனிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக அமைச்சர் ரிஷாத் சென்றிருந்தார். இதன்போது அமைச்சர் காட்டை அழித்து அந்தப் பகுதியில் தனது ஆதரவாளர்களை குடியேற்றும் திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரது ஆதாரவாளர்களும் அங்கு அமைச்சரால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நேற்றுக்காலை குறித்த காட்டுப்பகுதியின் அருகே 5 பைக்கோ இயந்திரங்கள் சகிதம் அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கு வந்து இறங்கினர். இதனை அறிந்து கொண்ட முல்லைத்தீவு மக்கள் நேற்றுக் காலை 7 மணிமுதல் மேற்படி காட்டுப் பகுதியில் குவிந்தனர்.
எங்களுக்கு காணிகள் வழங்காமல் இந்தக் காட்டை வெட்ட முற்பட்டால் "பைக்கோ' இயந்திரங்களை அடித்து நொருக்குவோம்'' எனத் தெரிவித்து அமைச்சரின் ஆதரவாளர்களை எச்சரித்தனர் முல்லைத்தீவு மக்கள். அத்துடன் "பைக்கோ' இயந்திரங்களுக்கு குறுக்காக படுத்து அவற்றை நகரவிடாமல் செய்தனர்.
மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நேற்று நண்பகல் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவில்லை. இறுதியில் நேற்று மாலை 4.30 மணியளவிலேயே அமைச்சர் ரிஷாத் அங்கு வந்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த முல்லைத்தீவு மக்கள் அமைச்சருக்கு எதிராகக் கொந்தளித்தனர்.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 940 குடும்பங்கள் காணியில்லாமல் உள்ளனர். எங்களுக்கு காணிகளை வழங்காமல் உங்கள் ஆதரவாளர்களுக்கு இங்கு காணிகள் வழங்கவிட மாட்டோம்.
நாங்கள் அளித்த வாக்குகளில் தான் நீங்கள் அமைச்சரானீர்கள். இப்போது உங்கள் ஆதரவாளர்களுக்காக மாத்திரம் செயற்படக்கூடாது. அதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை என்று மக்கள் ஒரே குரலில் திட்டவட்டமாகத் தெரிவித்து விடாப்பிடியாக இருந்தனர். மக்களின் கடும் எதிர்ப்புக்கு அமைச்சரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மக்கள் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்ததுடன் தமது முடிவிலும் உறுதியாக இருந்தனர். இதனால் ஒன்றரை மணி நேரமாக மக்களுடன் வாக்குவாதப்பட்ட அமைச்சர் ரிஷாத் இறுதியில் திங்கட்கிழமை (நாளை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு முடிவைக் கூறுவதாக சொல்லி அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார். அவரின் ஆதரவாளர்களை குடியேற்றும் ஆரம்ப முயற்சியும் இதனால் பிசுபிசுத்துப்போனது.
இதேவேளை நேற்று குறித்த பகுதியில் படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் எனப் பல நூற்றுக்காணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். குறித்த இடத்தில் காட்டை அழித்துவிட்டு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் விவசாயிகள் 18ஆம் திகதி உண்ணாவிரதம்

Written By Unknown on Sunday, February 10, 2013 | 11:21 AM

மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களும்,விவசாயிகளும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடத்தப்படவிருகின்றது.
 
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியினால் மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை அழிவடைந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர் நோக்கியுள்ள நஷ்டங்களை ஈடுசெய்யும் முகமாக அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான இன்று நடைபெற்ற  கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்த கலந்துரையாடல் மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே விவசாயிகளினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
 
குறித்த கலந்துரையாடலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், விவசாய அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்,பிரதான வாய்க்கால் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மற்றும் விவசாயிகள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
 
இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்தன.
 
இதன் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடணை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். நகைகளை வங்கியில் வைத்து பணத்தை பெற்றவர்கள் திருப்பி நகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
 
ஆனால் அசாங்கத்தினால் விவசாயிகளுக்கு அமுல்படுத்தப்பட்ட சகல திட்டங்களும் தென்பகுதி விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமுல்படுத்தவில்லை.இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்தும் தற்போது பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றதோடு விவசாய குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் அரசாங்கத்தினால் வடமாகாண விவசாயிகள் சகல விடையங்களிலும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து எதிர் வரும் 18 ஆம் திகதி அணைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து மன்னார் உயிலங்குளம் பகுதியில் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை   முன்னெடுத்து அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டிருப்பட்டது என்றார்.

தங்கத்திற்காய் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு இடையில் மோதல்!


முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டியெடுப்பதில், சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குள் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் உள்ளிட்ட 4 சிறிலங்காப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஒருவர் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர்.
பாரா 3 கப்பலின் சிதைவுகளை அண்டிய கடற்கரையில் அவர்கள் நிலத்தை தோண்டினர்.
அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள, சிறிலங்கா தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் துருப்பினர் அதை அவதானித்து, அவர்களிடம் ஏன் தோண்டுகிறீர்கள் என்று விசாரித்தனர்.
தன்னை அடையாளம் காட்டிய லெப்கேணல், அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவு தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதுபற்றி தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதற்கு தமது முன்அனுமதி பெற்றே அங்கு தோண்ட வேண்டும் என்று தேசிய காவல்படை அதிகாரிகள் அவர்களுக்கு கூறினர்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தாம் வந்த டபிள்கப் வண்டியில் ஏறி லெப்.கேணல் மற்றும் மூன்று படையினரும் தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக தேசிய காவல்படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தப்பிச் சென்ற லெப்.கேணல் மற்றும் படையினரைப் பிடிக்க வீதித் தடுப்புகள் போடப்பட்டன.
பன்சல்கட பகுதியில் போடப்பட்டிருந்த வீதித்தடையில் அந்த டபிள் கப் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோது, அது வேகமாக செல்ல முயன்றது.
அங்கிருந்த சிறிலங்காப் படையினர் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்த 62-1 பிரிகேட் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் பராக்கிரமபுர பகுதியில் வீதிகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இதை அவதானித்த அந்த நால்வரும் வாகனத்தை நெடுங்கேணிப் பக்கம் திருப்பிக் கொண்டு தப்பிசென்ற போதும், 62-1வது பிரிகேட் படையினர் துரத்திச் சென்று கைது செய்து சிறிலங்கா இராணுவ காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர்.
லெப்.கேணல் உள்ளிட்ட நான்கு சிறிலங்காப் படையினரும் சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
சோதனைச்சாவடியில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Written By Unknown on Sunday, January 13, 2013 | 3:04 PM

வவுனியா, சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 

சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை கணேசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று சனிக்கிழமை வீடு வந்து சேராத இவரை உறவினர்கள் தேடிச்சென்றபோது, இவர் குளத்தில் சடலமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதை வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சன்ன அபயரத்ன உறுதிப்படுத்தினார். 

சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன்,  பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். 

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

வெடிபொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

Written By Unknown on Sunday, September 9, 2012 | 9:11 AM

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா எரிக்பேரேரா தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரிப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாக்ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் ரி.என்.ரி. ரக வெடிபொருக்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது இவர்கள் இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை  கனகராயன்குளம்; பகுதியில் ரி 56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 90 ரவைகள், கிளைமோர் குண்டு இரண்டும் மாங்குளம் பகுதியில் 6 மோட்டார் ரவைகளும், மூன்று கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா மேலும் தெரிவித்தார்.

சுண்டிக் குளம் களப்புப் பகுதியில் குண்டு வெடிப்பு ; சிறுவன் காயம்

Written By Unknown on Monday, June 4, 2012 | 2:21 PM

சுண்டிக் குளம் களப்பு பகுதியில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவ மொன்றின் போது அப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜொனி மிதிவெடியொன்று வெடிப் புக்குள்ளானதிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள் ளது. இதன்போது 14 வயதுடைய கருப்பையா ராகவன் ௭ன்ற சிறுவனே காயமடைந்துள்ளதுடன் அந்த விடயம் தொடர்பாக ஆராயவென இராணுவ பொறியியல் பிரிவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரி கேடியர் ருவாண் வனிகசூரிய தெரிவித்தார்.
சுண்டிக்குளம் களப்பு பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிராமமொன்றிலிருந்து வந்த சிறுவர்கள் குறித்த களப்பு பகுதியால் மீன் பிடிப்பதற்கு இறங்கியுள்னர். அதன்போது களப்பில் கிடந்த ஜொனிமிதிவெடி வெடித்துள்ளது.
வெடிப்புச் சம்பவத்தினால் அச் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்துள்ள சிறுவன் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு சிகிச்சைப் பெற் று வருகிறார்.
விடுதலைப் புலிகளின ா ல் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட இந்த ஜொனிமிதிவெடி மழை காலத்தில் நீரில் அடித்து வரப்பட்டு இக் களப்பில் வீழ் ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பிலான ஆராய்சியில் இராணுவ விசேட பொறியியல் பிரி வொன்று ஈடுபட்டு வருவதுடன் அப் பகுதி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற வெடிப்பு சம்பவங்கள் பல வடக்கு – கிழக்கு பகுதிகளில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உளநலம் பாதித்த கணவன் மனைவியை அடித்துப் படுகொலை செய்தார்

Written By Unknown on Sunday, May 27, 2012 | 10:51 AM

news
உளநலம் பாதித்த கணவன் மனைவியை அடித்துப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் நேற்று மதியம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
 
நேற்று மதியம் பிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயம் குறித்த நபர் தனது மனைவியைக் கொட்டன் தடியால் தாக்கியுள்ளார் என்றும் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்த சமயம் குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
படுகாயமடைந்த நிலையில் பெண்ணை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சமயம் அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த யோகலிங்கம் பிறேமினி (வயது38) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரே கொலையுண்டவர் ஆவார்.
 
இவரது தந்தையார் வைத்தியராகக் கடமையாற்றி வருபவர் எனவும் மன நோயாளி எனக் கூறப்படும் கொலைச் சந்தேகநபரான இந்தப் பெண்ணின் கணவர் கிளிநொச்சியில் மருந்தகம் ஒன்றை நடாத்தி வந்தவர் எனவும் வன்னியில் இடம் பெற்ற இறுதிப் போரினால் இடம்பெயர்ந்து மன நோயாளியாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளுக்கு உத்தரவிட்டார். கிளிநொச்சிப் பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை

Written By Unknown on Sunday, May 6, 2012 | 8:00 AM

கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப்
பார்வையிடுவதற்காக சென்ற வேளையில் 50 வயதுடைய
கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவரே
இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணைகலில் பொலிசார் ஆர்வம்
காட்டுகின்ற போதிலும் இந்தக்கொலைக்கு பின்னர் இங்கு பெரும்
பதற்றமான நிலைமைகள் காணப்படுவதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த யப்பானியப் பிரதிப் பிரதமர்!

Written By Unknown on Saturday, May 5, 2012 | 11:02 AM


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட யப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒக்காடா கிளிநொச்சி சாந்தபுரப் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதன் போது மக்களின் நிலைமைகளை பார்வையிட்டதோடு யப்பானிய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டுவரும் அக்கராயன் குளத்தினையும் பார்வையிட்டுள்ளார்.
அத்தோடு மாணவர்களை கொண்ட குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்கலங்களையும் வழங்கிவைத்தார்.
இந்த விஜயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ், பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவிகளுடன் தகாத செயல், போக்குவரத்து அனுமதியை இழந்த வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்.

Written By Unknown on Thursday, May 3, 2012 | 8:24 PM

யாழ்-வவுனியா பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வவுனியாவை சேர்ந்த தனியார் பஸ் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று முன்தினம்(01.05.2012) பிற்பகல் (1.05)வவுனியாவிற்கு பயணித்த இரு பாடசாலை மாணவிகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட பஸ்சின்  உரிமையாளர், நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்க அதிகாரி ஒருவரினாலேயே வவுனியா தனியார் பஸ் தரிப்பிடத்தில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இம்மூவரும் தங்களது அனுமதி பத்திரத்தை இழந்துள்ளதுடன் வடமாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்படுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட மாணவிகள் இருவரும் மாங்குளத்தில் இறங்க வேண்டியவர்கள் என்பதால் அவர்களை மாங்குளத்தில் அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.
வவுனியா போலீசார் இது தொடர்பான மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger