கற்பழிப்பு முயற்சி: கர்ப்பிணி அண்ணி கொலை: கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை - R News
Headlines News :
Home » » கற்பழிப்பு முயற்சி: கர்ப்பிணி அண்ணி கொலை: கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை

கற்பழிப்பு முயற்சி: கர்ப்பிணி அண்ணி கொலை: கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை

Written By Unknown on Sunday, February 5, 2012 | 6:27 PM

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு ராம்குமார், கண்ணன், முரளி ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அண்ணன் ராம்குமாரும், தம்பி கண்ணனும் (வயது 24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.

இந்த நிலையில் ராம்குமாருக்கும், ஜெயஸ்ரீ என்ற சுஜாவுக்கும் 17.6.07 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தபிறகு, அவர்களின் குடும்ப நண்பர் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து அதில் வசித்தனர். அவர்களுடன் கண்ணனும் தங்கியிருந்தார்.

ஜெயஸ்ரீக்கு அவரது கொழுந்தன் கண்ணன் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். உடை மாற்றும்போது ஒளிந்திருந்து பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதுபற்றி வீட்டு உரிமையாளரிடம் பலமுறை ஜெயஸ்ரீ முறையிட்டுள்ளார். தனது தாயாரிடமும் கண்ணனின் நடவடிக்கை பற்றி ஜெயஸ்ரீ கூறினார்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ கர்ப்பமானார். குழந்தை பிறந்தபிறகு இந்தப் பிரச்சினை பற்றி ராம்குமாரிடம் தெரிவிக்கலாம் என்று ஜெயஸ்ரீயிடம் தாயார் கூறினார்.

16.2.08 அன்று கணவர் ராம்குமார் பெங்களூருக்கு சென்றுவிட்டார். அப்போது ஜெயஸ்ரீ 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். 17.2.08 அன்று இரவில் ராம்குமார் வீட்டில் ஜெயஸ்ரீக்கும், கண்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் அவர்கள் வீட்டுக்குச் சென்று என்ன என்று கேட்டார். கண்ணன் தன்னுடன் தகாத முறையில் நடக்க முயற்சிப்பதாக ஜெயஸ்ரீ கூறினார். அதைத் தொடர்ந்து கண்ணனை வீட்டு உரிமையாளர் எச்சரித்தார்.

இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்று உறுதி அளித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 7 மணியளவில் வீட்டுக்கு வெளியே வீட்டு உரிமையாளர் வந்தார். வழக்கம்போல் ஜெயஸ்ரீ போடும் கோலம், வீட்டு முன்பு காணப்படவில்லை.

 எனவே சந்தேகத்தின் பேரில் அவர்களின் வீட்டுக்குச்சென்று பார்த்தார். அங்கு ஜெயஸ்ரீ வயிற்றில் கத்தி பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். கண்ணன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். போகும் முன்பு ஜெயஸ்ரீயின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியையும் கண்ணன் பறித்துச் சென்றுவிட்டார்.

இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கண்ணன் மீது கற்பழிப்பு முயற்சி, கொலை, பிறக்காத குழந்தையின் சாவுக்கு காரணமான குற்றம், நகை கொள்ளை ஆகிய குற்றங்களின்கீழ் கண்ணன் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.சேதுமாதவன் விசாரித்தார். அரசுத் தரப்பில் வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அவர், அரசுத் தரப்பு சாட்சிகள் மூலம் கண்ணன் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger