சச்சினுக்காக தனுஷின் புது ANTHEM - R News
Headlines News :
Home » » சச்சினுக்காக தனுஷின் புது ANTHEM

சச்சினுக்காக தனுஷின் புது ANTHEM

Written By Unknown on Sunday, February 5, 2012 | 6:13 PM


இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக Anthem ஒன்றை நாயகன் தனுஷ் வடிவமைத்துள்ளார்.
கொலிவுட்டில் தன் மனைவி இயக்கத்தில் வெளியாக உள்ள 3 படத்தில் இடம்பெற்ற WHY THIS KOLAVERI பாடல் மூலம் தனுஷ் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதையடுத்து இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ஆல்பம் ஒன்றை நாயகன் தனுஷ் வடிவமைத்துள்ளார்.
கிரிக்கட்டில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் சச்சின், பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார்.
அந்த வகையில் BOOST விளம்பர தூதுவராக 25 ஆண்டுகளாக சச்சின் இருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் தனுஷிடம் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தருமாறு கேட்டு இருக்கிறது BOOST நிறுவனம்.
WHY THIS KOLAVERI பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருவதால் BOOST நிறுவனம் தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளது.
பாடல் மட்டுமே எழுதி பாடி வந்த தனுஷ் இந்த பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். அதற்கு அனிருத் உதவி செய்திருக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இப்பாடலில் தனுஷ் உடன் அனுஷ்காவும் இணைந்து ஆடி இருக்கிறார்.
MAKING OF DHANUSH ANTHEM FOR SACHIN என்ற பெயரில் YOUTUBEல் இப்பாடல் உருவான விதம் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் இப்பாடல் KOLVERI பாடலை விட வரவேற்பை பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் தனுஷ் இருக்கிறார்.
Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger