வடமாகாண பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கலாச்சார சீர்கேடுகள்: - R News
Headlines News :
Home » , » வடமாகாண பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கலாச்சார சீர்கேடுகள்:

வடமாகாண பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கலாச்சார சீர்கேடுகள்:

Written By Unknown on Sunday, March 4, 2012 | 4:20 PM



 வடமாகாணத்தில் கடந்த வருடம் 179 சிறார்கள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைவிட 102 சிறார்கள் உடல்ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர். 45 பேர் இளவயதுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் இருந்து மட்டுமே இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளது என்று வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறார்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 65 பேரும்,
வவுனியால் 39 பேரும்,
முல்லைத்தீவில் 32 பேரும்,
கிளிநொச்சியில் 28 பேரும்,
மன்னாரில் 15 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
உடல்ரீதியான துஷ்பிரயோகம் வவுனியாவிலேயே அதிகம் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் 45 பேரும்,
முல்லைத்தீவில் 32 பேரும்,
யாழ்ப்பாணத்தில் 12 பேரும்,
மன்னாரில் 11 பேரும்,
கிளிநொச்சியில் 2 பேருமாக மொத்தம் 102 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
இளவயதுத் திருமணங்கள் முல்லைத்தீவிலேயே அதிகம் நடந்திருக்கின்றமையை பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
முல்லைத்தீவில் 18 பேரும்,
யாழ்ப்பாணத்தில் 14 பேரும்,
மன்னாரில் 8 பேரும்
கிளிநொச்சியில் 4 பேரும்
வவுனியாவில் ஒருவருமாக மொத்தம் 45 பேர் இளவயதுத் திருமணம் புரிந்துள்ளனர்.
மனக்குழப்பத்துக்கு உள்ளான நிலையில் 103 சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் வவுனியாவைச் சேர்ந்தவர்களே அதிகமானவர்கள்.
வவுனியாவில் இவ்வாறு 57 பேரும்,
யாழ்ப்பாணத்தில் 16 பேரும்,
மன்னாரில் 13 பேரும்
முல்லைத்தீவில் 10 பேரும்
கிளிநொச்சியில் 7 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேசமயம், உறவினர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சட்ட முரண்பாடான வகையில் 108 சிறார்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமான எண்ணிக்கையாக
வவுனியாவில் 49 பேரும்
யாழ்ப்பாணத்தில் 25 பேரும்,
கிளிநொச்சியில் 15 பேரும்,
முல்லைத்தீவில் 8 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களை இவர்களது உறவினர்களுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில் 15 சிறார்கள்இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 13 பேரும்,
மன்னாரில் 2 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களையும் உரிய வகையில் வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மாத்திரமே இவை இனங்காணப்பட்டுள்ளன என்று விஸ்வரூபன் மேலும் தெரிவித்தார்.
இன்னும் முறைப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ???
Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger